சித்தாமூர் ஒன்றியத்தில் இடியும் நிலையில் பால் கூட்டுறவு சங்க கட்டிடம்; புதிதாக கட்டி தர வலியுறுத்தல்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள பெருங்கரணை கிராமத்தில் நீண்ட காலமாக பால் உற்பத்தி கூட்டுறவு சங்க கட்டிடம் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக்கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பசுக்களிடம் இருந்து பாலை கறந்து, இக்கூட்டுறவு சங்கத்தில் பாலை கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது இந்த சங்க கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்களுடன் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இச்சங்க கட்டிடத்தில் பணிபுரிபவர்களும் பால் கொள்முதல் செய்ய வருபவர்களும் உயிர் பயத்துடனே சென்று வருகின்றனர்.

இந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிதாக ஒரு கட்டிடம் கட்டி தரவேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, இங்குள்ள சங்க கட்டிடம் இடிந்து விழுந்து அதிகளவு உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன்பு, அக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டி தருவதற்கு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: