மும்பை - புனே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - புனே விரைவுச் சாலையில் போர்காட் என்ற இடத்தில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காயமடைந்த மூன்று பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘காபோலி பகுதிக்கு அருகில் நேற்று நள்ளிரவு இரண்டு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த மூன்று பேர் கமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றனர்.

Related Stories: