அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி; நம்பி வந்தால் தூக்கி விடுவோம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை: அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். டெல்லி புறப்பட்டுவிட்ட அதிமுக என்ற எக்ஸ்பிரஸில் ஏறுபவர்கள் ஏறி கொள்ளலாம் என்றும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் நுலையூர் கால்வாய் குறுக்கே பழுதடைந்ததால் புதுப்பிக்கப்பட்ட பாலத்தையும், புதிய பேருந்து நிறுத்த கட்டிடத்தையும் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர், கூட்டணிக்கு நம்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றார்.

கூட்டணிக்கு அதிமுக தான் என்றுமே தலைமை ஏற்கும் என்று தெரிவித்த செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று குறிப்பிட்டார். தேர்தல் நேரத்தில் அதிமுக ஒன்றாக இணையும் என கூறியுள்ள செல்லூர் ராஜூ, எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் பிளவு இருந்தது என்று தெரிவித்தார். தற்போது எடப்பாடி காலத்திலும் கட்சியில் சிதறல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: