×

கார்த்திக் நாராயணன் பிறந்த நாள் விழா ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி: மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

சென்னை: சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி செயலாளரும், சென்னை லீ பேலஸ், சென்னை டீலக்ஸ் ஹோட்டல்களின்  மேலாண்மை இயக்குனருமான கார்த்திக் நாராயணன்  தனது பிறந்தநாளை  தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.     சுகன்யா கார்த்திக், நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாநில மாணவரணி துணை செயலாளர்கள்  சோனை யாதவ், கே.சி.ராஜாகுமார், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர், எர்ணாவூர் நாடார் உறவின்முறை செயலாளர் சுந்தரேசன், மதுரை சண்முகம், தொழிலதிபர் கிருஷ்ணன், நாடார் பேரவை மாவட்ட  செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கார்த்திக் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வடசென்னை நாடார் பேரவை மாவட்ட செயலாளர் கே.கே.சீனிவாசன், ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் வண்ணாரப்பேட்டை முகுந்தம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. வடசென்னை நாடார் பேரவை  அலுவலகம் அருகில்  கார்த்திக்  கொடி  ஏற்றி இனிப்பு வழங்கி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ஆலயத்தில் சிறப்பு ஆராதனை, அன்னதானம் நடைபெற்றது.

திருவொற்றியூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் உபயோகத்திற்காக கணினி உபகரணங்களை கார்த்திக் நாராயணன் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் இன்று  பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்கள், கோயம்பேடு பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, நலத்திட்ட உதவிகள், பால்வண்டி வழங்கப்பட்டது. நலிவுற்ற ஊழியர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மங்களம் குரூப் ஊழியர்கள், கோயம்பேடு சென்னை டீலக்ஸ், போரூர் லீ பேலஸ், ஹோட்டலில்  ஊழியர்களுடன்  பிறந்தநாள் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சிகளில், தொழிலதிபர்கள் எஸ்.வருண்குமார், குமரன், சேகர், இளைஞரணி செயலாளர் கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு, பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள்  தங்கமுத்து, வழக்கறிஞர் விநாயகமூர்த்தி, முனீஸ்வரன்,  ஜெபராஜ் டேவிட், பாலசேகர், மதுரை வீரன், பாஸ்கர், விஜயன், ராம், சுபாஷ், பாலசுப்பிரமணியம், முத்துக்குமார், செல்வகுமார், சுடலைமணி, ஏ.எஸ்.அந்தோணி, தாம்பரம் சுனை  சேகர், சுரேஷ், சண்முக ராஜா, தங்கதுரை, முகமது வசீம், மகளிரணி தேவி, கல்பனா,  குணசுந்தரி, ஆனந்தி, அனிதா நாடார் பேரவை இளைஞரணி ராஜேஷ், பாலமுருகன், செல்வா, சங்கரபாண்டியன், அலெக்ஸ், விஸ்வநாதன் மற்றும் சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.Tags : Karthik Narayanan , Karthik Narayanan's birthday party Welfare assistance to the poor: Education equipment for students
× RELATED சமத்துவ மக்கள் கழக மாணவரணி செயலாளர்...