ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஆஸ்திரேலிய உறவினர் கைது

அம்பத்தூர்: செங்கல்பட்டு அடுத்த செய்யூர் பகுதியில் வசித்து வருபவர் ரோஸி (28).  ஆங்கிலோ இந்தியன். இவர், கடந்த 6ம் தேதி வில்லிவாக்கம் பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். இதுபோல் ரோஸியின் உறவுக்காரரான ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் கேரி க்ளார்க் (51) என்பவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளார்.

இருவரும் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததால் வெகுநேரம் பேசியுள்ளனர். அப்போது,  ‘உன்னிடம் தனியாக பேசவேண்டும்’ என கூறி ரோஸியை ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ரோஸியின் கையை பிடித்து இழுத்து கேரிக்ளார்க் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரோஸி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் கேரிக்ளார்க் ஓட்டம் பிடித்தார். பின்னர், உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி ரோஸி அழுதுள்ளார். இதையடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரோஸி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சாமுண்டீஸ்வரி தலைமையிலான போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கேரி க்ளார்க்கை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கேரி க்ளார்க்கை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: