‘‘வந்தா வா... வரலன்னா போ...’’கூட்டணிக்கு அதிமுகதான் என்றுமே தலைமை செல்லூர்; ராஜூ அதிரடி பேட்டி

மதுரை: அதிமுகதான் என்றுமே கூட்டணிக்கு தலைமை தாங்கும். நம்பி வந்தால் வரலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி புறப்பட்டுவிட்டது. எக்ஸ்பிரசில் ஏறுபவர்கள் ஏறலாம். ஏறுபவர்கள் டெல்லி போகலாம். ஏறாதவர்கள் இங்கேயே இருக்கலாம். அதிமுக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணிக்கு நம்பி வந்தால் ஏற்றிக் கொள்வோம். அதிமுக தான் என்றுமே தலைமை. இது இன்றல்ல நேற்றல்ல.

இதுதான் வரலாறு. எங்களை நம்பி வந்தால் கை தூக்கி விடுவோம். 2019ல் நடந்ததை நினைத்து கொண்டிருக்கக் கூடாது. காலம்  மாறுகிறது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் ஆட்சியில் இருக்கும். இது பெரியார் மண், அண்ணா மண். அதிமுக தொண்டர்கள் ஒன்றாகத்தான் உள்ளோம். அதிமுகவில் நடப்பது வழக்கமான ஒன்று. தற்போது கட்சியின் வழிகாட்டியாக மாலுமியாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். பிரிந்து போனவர்களை இணைப்பது குறித்து அவர்தான் முடிவெடுப்பார். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

Related Stories: