திருப்பதி எஸ்ஜிஎஸ் கல்லூரிக்கு ‘ஏ பிளஸ்’ கிரேடு பெற குழுவாக பணியாற்ற வேண்டும்-இணை செயல் அதிகாரி வேண்டுகோள்

திருமலை : திருப்பதி எஸ்ஜிஎஸ் கல்லூரிக்கு ‘ஏ பிளஸ்’ கிரேடு பெற குழுவாக பணியாற்ற வேண்டும் என்று இணை செயல் அதிகாரி சதா பார்கவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 திருப்பதி கோவிந்தராஜா சுவாமி கல்லூரியில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை  திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி சதா பார்கவி நேற்று மாலை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கல்லூரியில் உள்ள அனைத்து துறை வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

எஸ்பி டபிள்யூ, எஸ்வி கலை கல்லூரிக்கு சமீபத்தில் என்ஏசி ஏ பிளஸ் கிரேடு அங்கீகாரம் கிடைத்தது. எஸ்ஜிஎஸ் கல்லூரியும் முதல் முறையாக நாக் அங்கீகாரம் பெற கல்லூரியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத குழுவினர் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கல்லூரிக்கு என்ஏசி ஏ பிளஸ் கிரேடு அங்கீகாரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட 16 மாணவிகளுக்கு  கோவிந்தராஜ சுவாமி வாக்கர்ஸ் சங்கம் அறிவித்த ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்வாறு, அவர் பேசினார். ஆய்வின்போது கல்லூரி முதல்வர் வேணுகோபால், கோவிந்தராஜ சுவாமிகள் வாக்கர்ஸ் சங்கத் தலைவர் பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: