×

எலான் மஸ்க்கின் அழுத்தம் எதிரொலி: பணியில் இருந்து தானாக விலகும் ட்விட்டர் ஊழியர்கள்..நிரம்பி வழியும் ப்ளூ ஹார்ட்ஸ், சல்யூட் எமோஜிகள்..!!

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் மீதான அழுத்தத்தை அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் அதிகரித்து வருவதன் எதிரொலியாக ஏராளமானோர் ராஜினாமா செய்து வருகின்றனர். ட்விட்டரை தன்வசப்படுத்திய சூட்டோடு சூடாக எலான் மஸ்க் முக்கிய தலைமை நிர்வாகிகளை நீக்கியத்துடன் சுமார் 50 விழுக்காடு அளவுக்கு திடீர் ஆட்குறைப்பு செய்தார். இதனால் எஞ்சியிருந்த ஊழியர்களின் வேலைபளு பன்மடங்கு உயர்ந்துவிட்டது. எலான் மஸ்க் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் ட்விட்டரை புதுப்பிக்கும் பணியை முடிப்பதற்கு அந்நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள், நாள் ஒன்றுக்கு 12 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பணியில் ஏற்பட்ட அழுத்தம், வேலை நிரந்தரமின்மை அச்சம் காரணமாக பெருமளவு ஊழியர்கள் ராஜினாமா செய்ய தொடங்கியுள்ளனர். தங்கள் ட்விட்டர் பக்கத்திலேயே இதுதான் கடைசி வேலை நாள் என்று குறிப்பிட்டுவிட்டு விலகும் போக்கு ட்விட்டரில் அதிகரித்து வருகிறது. பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் எலான் மஸ்க் தங்களையும் பணிநீக்கம் செய்யக்கூடும் என்று அஞ்சி அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ட்விட்டர் ஊழியர்கள் Love Where You Work என்ற ஹேஸ்டேக்குடன் ட்விட்டர் இடுகுகளில் தங்கள் பதவி விலகலை அறிவித்து வருகின்றனர். ப்ளூ ஹார்ட்ஸ் மற்றும் சல்யூட் எமோஜிகள் நேற்று முதல் ட்விட்டர் மற்றும் அதன் சேட் பக்கங்களில் நிரம்பி வழிகின்றன. 


Tags : Elon Musk ,Twitter , Elon Musk, pressure, Twitter employees, resignation
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...