×

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விக்ரம்-எஸ் ராக்கெட்டானது 2 இந்திய செயற்கை கோள்கள் உட்பட 3 செயற்கை கோள்களை சுமந்து சென்றது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 3 செயற்கை கோள்களும் நிலை நிறுத்தப்படவுள்ளன.

இந்திய விண்வெளித்துறையில் முதன்முறையாக தனியார் வடிவமைத்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டானது 2 இந்திய செயற்கை கோள்கள் உட்பட 3 செயற்கை கோள்களை சுமந்து சென்றது. அதிகபட்சமாக 83 கிலோ கிராம் எடை கொண்ட இந்த செயற்கோள்களை பூமியிலிருந்து 120 கி.மீ. உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

இதுவரை இஸ்ரோ தயாரிப்பில் ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ஆகிய 2 வகை ராக்கெட்டுகள் மூலமாக மட்டுமே விண்வெளிக்கு இதுவரை செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டது. வெளிநாடுகளிலிருந்தும், தனியார் நிறுவனங்கள் சார்ந்தும் பல செயற்கைகோள்கள் இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் முதன்முறையாக தனியார் வடிவமைத்த ராக்கெட் இந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் 5 நிமிடங்களில் அதிகபட்ச உயரமான 81 கிலோமீட்டர் உயரத்தை அடைந்த பின்பு இந்த 3 செயற்கைகோள்களையும் விண்ணிலே அதனுடைய புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. தேசிய விண்வெளிவளர்ச்சி, அங்கீகார மைய ஒப்புதலால் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவப்பட்டது.

Tags : India ,Vikram , India's first private rocket Vikram-S successfully launched
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...