×

நவ.20,21,22ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

டெல்லி: நவ.20,21,22ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21ம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், 22ம் தேதி வட தமிழக மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதையடுத்து கடந்த 10ம் தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இரண்டாவது மழைப்பொழிவு தொடங்கியது. இதில் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பரவலான இடங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றும்,  நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாளான 20ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வட தமிழகத்தில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் மிககனமழைக்குவாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு வங்கக்கடலில் 19ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி 3 நாட்களுக்கு நகரும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department Information , Chance of heavy rain at a couple of places in Tamil Nadu on November 20, 21, 22: Meteorological Department Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...