×

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால அருவியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதலே போலீசார் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்க மறுத்தனர்.

இன்று காலை ஐந்தருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் அதிக வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Western Ghats ,Koortala , Due to heavy rains in Western Ghats, bathing in Koorala Falls is prohibited
× RELATED பழைய குற்றாலத்தில் அனுமதி...