விஐடி பல்கலை சார்பில் கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்தநாள் விழா

சென்னை: கேளம்பாக்கம் அருகே தமிழியக்கம் மற்றும் விஐடி பல்கலை கழக விழா நடந்தது. இதில், தமிழியக்கமும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 124வது பிறந்த நாள் மற்றும் செந்தமிழ் காவலர் சி.இலக்குவனாரின் 114வது பிறந்த நாள் விழா கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள விஐடி பல்கலைகழகத்தில் நேற்று நடந்தது.

இந்த விழாவிற்கு விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனரும், தமிழியக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான கல்விக்கோ கோ. விசுவநாதன் தலைமை தாங்கினார். விழாவில், தமிழியக்கத்தின் மாநில செயலாளர் மு.சுகுமார் அனைவரையும் வரவேற்றார். தமிழியக்கத்தின் தென் தமிழக ஒருங்கிணைப்பாளர் மு.சிதம்பர பாரதி, வட தமிழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.வணங்காமுடி, பொருளாளர் புலவர் வே.பதுமனார், பொது செயலாளர் கவியருவி அப்துல்காதர், கி.ஆ.பெ.விசுவநாதம் மகள் மணிமேகலை கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், இணை துணைவேந்தர் முனைவர் காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் முனைவர் மனோகரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம், இந்திய தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் காந்த் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழியக்கத்தின் வட தமிழக மகளிர் ஒருங்கிணைப்பாளர் கவிக் காரிகை ஞானி நன்றி கூறினார்.

Related Stories: