புழல் சிறையில் கைதிகளுடன் உணவு சாப்பிட்டார் டிஜிபி

சென்னை:  புழல் சிறைகளில் விசாரணை மேற்கொண்ட சிறை துறை டிஜிபி கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். சென்னை புழல் தண்டனை சிறையில் 900 க்கும் மேற்பட்ட கைதிகளும், விசாரணை சிறையில் 2900க்கும் மேற்பட்ட கைதிகளும் உள்ளனர். இதுதவிர,  பெண்கள் சிறையில் 150க்கு மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,  சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி நேற்று விசாரணை மற்றும் தண்டனை சிறைகளில் ஆய்வு செய்தார். மேலும்,  கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது சிறைத்துறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: