×

போதைப்பொருள், போக்சோ சட்டம் குறித்து பள்ளி, கல்லூரிகள் உட்பட 207 இடங்களில் விழிப்புணர்வு: மாநகர காவல்துறை நடத்தியது

சென்னை: போதைப்பொருள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து சென்னையில் 171 பள்ளிகள், 12 கல்லூரிகள் உட்பட 207 இடங்களில் மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும்,
பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்தும் பெண்கள் மற்றும் மாணவ மாணவிகள், அறியும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அந்தந்த காவல் மாவட்டத்தில் உள்ள உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நேற்று சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள 171 பள்ளிகள், 12 கல்லூரிகள் மற்றும் 24 பொது இடங்கள் என மொத்தம் 207 இடங்களில், போதை பொருள் எதிர்ப்பும், அதன் தீமைகள் குறித்தும், போக்சோ சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இந்த சிறப்பு விழிப்புணர்வு முகாமில் 15,468 பள்ளி மாணவ, மாணவிகள், 820 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 620 பொதுமக்கள் என மொத்தம் 16,908 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு போதை பொருட்கள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்து முழுமையாக காவல்துறை அதிகாரிகள் எடுத்து கூறி அதற்கான விளக்கங்களும் அளித்தனர்.

Tags : Narcotics, POCSO Act, School, Colleges, Awareness, City Police conducted
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...