மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஐஏஎஸ் அதிகாரி சி.வி.ஆனந்தா போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசனுக்கு, மேற்கு வங்க மாநிலம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக, ஐஏஎஸ் அதிகாரியான சி.வி.ஆனந்தா போஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி நேற்று பிறப்பித்தார். கலெக்டர், முதன்மை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளராக போஸ் பணியாற்றி உள்ளார். கல்வி, வனம் மற்றும் சுற்றுச்சூழல், தொழிலாளர் மற்றும் பொது நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர். தற்போது, மேகாலயா அரசின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். 

Related Stories: