×

அமலாக்கத் துறை விசாரணைக்கு சோரன் ஆஜர்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்களை முதல்வர் ஹேமந்த் சோரன் தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாகவும், ரூ.1000 கோடி  முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது, தொடர்பாக அமலாக்கத்துறை  விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே ஒரு முறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். 2வது முறையாக நேற்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags : Soren , Enforcement Directorate Investigation, Soren Auger
× RELATED ஹேமந்த் சோரனுக்கு எதிராக டிவி, பிரிட்ஜ் வாங்கிய ரசீதை ஆதாரமாக காட்டிய ஈடி