கர்நாடகாவில் தனியார் நிறுவனம் மூலமாக வாக்காளர்கள் தகவல் திருட்டு பொம்மை பதவிக்கு ஆபத்து: பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடகாவில் வாக்காளர்களின் தகவல்களை தனியார் தொண்டு நிறுவனம் திருடியதற்கு பொறுப்பேற்று முதல்வர் பசவராஜ் ெபாம்ைம பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், பெங்களூரு மாநகரில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை சிலுமே என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 19  தேதிநடத்தியது.

இதற்கு மாநகராட்சி தேர்தல் அதிகாரியும் அனுமதி வழங்கினார். பிறகு, அந்த நிறுவனம் சார்பில் களத்தில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் என அரசு அடையாள அட்டையை போலியாக அச்சிட்டு வழங்கியது அம்பலம் ஆகியுள்ளது. இப்பிரச்னையால் முதல்வர் பொம்மையின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜி வாலா பெங்களூருவில் நேற்று அளித்த பேட்டியில், ‘வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருந்தா,ல் அதை ஏன் முன்கூட்டியே தேர்தல் ஆணையம் செய்தித்தாள்களில் விளம்பரப் படுத்தவில்லை? ஒரே நாளில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது ஏன்? இந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் பொம்மை உடனடியாக பதவி விலக வேண்டும்,’ என்றார்.

முதல்வர் பொம்மை கூறுகையில், ‘வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இருப்பினும், சிலுமே மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளேன். இந்நிறுவனம் விதிமுறைகளை மீறியதால், அதற்கு வழங்கிய அனுமதியை பெங்களூரு மாநகராட்சி ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம்தான். ஆனால், ஆதாரம் இல்லாமல் பாஜ அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. சிலுமே பற்றி எனக்கு தெரியாது. ரவிக்குமார் என்பவரை தெரியும். இப்பிரச்னைக்காக நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை,’ என்றார்.

Related Stories: