×

சிறப்பான செயல்பாடு காரணமாக 16 ஐஐடிக்கு ஒன்றிய அரசு ரூ.32 கோடி மானியம்

சென்னை: தமிழகத்தில் 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. அகில இந்திய தொழிற்தேர்வில் 91% பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒன்றிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்காக தொழிற் துறை மதிப்பு விரிவாக்கத்திற்காக திறனை மேம்படுத்தும் திட்டமானது உலக வங்கி உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 13 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், 3 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என ரூ.29.01 கோடி தொகை மானியத்துக்கு ஒப்பளித்துள்ளது. தற்போது ஒன்றிய அரசு தமிழகத்தில் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களும் சிறப்பாக செயல்படுவதை கருத்தில் கொண்டு மேலும் 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தலா ரூ.2 கோடி வீதம் மொத்தம் ரூ.32 கோடி மானியம் வழங்குவதற்கான ஆணையை பிறப்பித்துள்ளது.

Tags : Union Govt , Union Govt grants Rs 32 crore to 16 IITs for outstanding performance
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...