பள்ளி மாடியில் இருந்து குதித்து பிளஸ் 1 மாணவி தற்கொலை முயற்சி

ஏரல்: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தூத்துக்குடி அருகே எல்லநாயக்கன்பட்டியை சேர்ந்த மாணவி பிளஸ்1 படித்து வருகிறார்.

கடந்த 15ம் தேதி விளையாட்டு நேரத்தின் போது தனியாக முதலாவது மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை ஆசிரியர்கள் மீட்டு சாயர்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில், சாயர்புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்து சென்றுள்ளார். தன்னை கருப்பு உருவம் பின் தொடர்வதாகவும், அதுதான் தன்னை மாடிக்கு அழைத்து சென்று குதித்து விளையாடலாம் என கூட்டிச் சென்றதாகவும், அதனால்தான் குதித்ததாகவும் கூறியுள்ளார்.

Related Stories: