காசியில் படகோட்டிகள் என்னைவிட நன்றாக தமிழில் பேசுவார்கள்: காசி ரயிலை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து புறப்படும் பொதுமக்களின் வசதிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசிக்கு (காசி) செல்லும் ரயிலை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களில் கிட்டத்தட்ட  2,592 பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகின்றன. முதல் நாளான நேற்று, வாரணாசிக்கு ரயிலில் செல்லும் குழுவில் 216 பேர் இடம்பெற்று உள்ளனர். பின்னர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:  தமிழ்நாட்டு மக்கள் காசிக்கு போக வேண்டும், காசியில் இருந்து வருபவர்கள் இங்கே வர வேண்டும். அதுவே பாரதம். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதுவே பாரதம்.  காசியில் படகோட்டும் பலரும் என்னை விட நன்றாக தமிழில் பேசுவார்கள். இரண்டு ஊர்களுக்கும் இடையே இருந்த கலாச்சாரம் தொடர்பாக ஏற்படுத்தும் என்றார்.

Related Stories: