×

சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஓமியோபதி படிப்புக்கு தரவரிசை பட்டியல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

சென்னை: சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் பட்டப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பட்ட மேற்படிப்பு இட ஒதுக்கீடு ஆணையை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: அரசு ஆயுர்வேதா, சித்தா (2), யுனானி, ஓமியோபதி என ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 21 இடங்களும், மற்ற இடங்கள் 259ம் உள்ளன. 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1660 இடங்கள் உள்ளன. அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இட ஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும், அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளன. தகுதியான விண்ணப்பங்களாக 2573,  தரவரிசையில் பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் 580, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 878 விண்ணப்பங்கள், தகுதியான விண்ணப்பங்கள் 812, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 474 மாணவர்கள் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான மாணவர் எண்ணிக்கை 270, நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்விற்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 93 ஆகும்.

Tags : Minister ,M.Subramanian , Rank List for Siddha, Ayurveda, Unani Homeopathy Course: Minister M. Subramanian Released
× RELATED தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட,...