மாணவி ரயில் முன் தள்ளி கொலை குண்டாசில் போட்டதை எதிர்த்து சதீஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்ய பிரியாவை அதே குடியிருப்பில் வசித்த சதீஷ்குமார்அக்டோபர் 13ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யாவை, ரயில் முன் தள்ளி கொலை செய்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அக்டோபர் 14ம் தேதி சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சிபிசிஐடி பரிந்துரையின் அடிப்படையில் சதீஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி நவம்பர் 4ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு படி சதீஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானார். இதையடுத்து தன் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன், வழக்கு தொடர்பாக அரசு, மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் 8 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

Related Stories: