பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக  சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ச.கருத்தையாபாண்டியன், மு.ஜெயராமன், இரா.சுடலைக்கண்ணன்,  கே. மேக்ராஜ், மருத்துவர் பெரு.மதியழகன், முன்னாள் பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.பி.சரவணன் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி முதல்வர், முத்தூர், திருப்பூர் மாவட்டம் ஆகியோர்களை நியமனம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: