×

தங்கம் விலை திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று திடீரென சவரனுக்கு ரூ.160 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும், பிறகு அதே வேகத்தில் குறைந்தும் வருகிறது. கடந்த 12ம் தேதி ஒரு சவரன் ரூ.39,136க்கு விற்கப்பட்டது. 14ம் தேதி சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,208க்கு விற்கப்பட்டது. 16ம் தேதி சவரனுக்கு ரூ.312 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,520க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,970க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,760க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.624 அளவுக்கு உயர்ந்தது. இந்த தொடர் விலை ஏற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,950க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.39,600க்கும் விற்கப்பட்டது.

Tags : Sudden fall in gold prices: Sawaran down by Rs.160
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...