×

பணி நியமனத்தில் முறைகேடு விவகாரம் பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 254 பேர் டிஸ்மிஸ்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் 6 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த முறைகேடுகள் ஜெயசந்திரன் என்பவரது காலத்தில் நடந்தது. இந்நிலையில் 254 பேரில் 152 பேருக்கு உரிய கல்வி தகுதி இல்லை. தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நியமிக்கப்பட்டார்.

பிரச்னைக்கு உட்பட்ட 152 உதவிப் பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நீதிபதி சண்முகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுசம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும் எனக் கூறி, இவர்களின் கல்விச் சான்றுகளை பெற்று சரிபார்க்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்ததார். இதையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர் சம்மந்தப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையில், ஆசிரியர் பணி அனுபவத்துக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவி பேராசிரியர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உரிய கல்வி தகுதியுடன்தான் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று வாதிட்டனர். கல்லூரி கல்வி இயக்குநர் சார்பில் சிறப்பு அரசு பிளீடர் டி.ரவிச்சந்திரன், அரசு வழக்கறிஞர் சி.ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, சிறப்பு அரசு பிளீடர், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில்தான் பணி நியமனத்திற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் அனைத்து கல்லூரிகளிலும் பணி நியமனம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து நீதிபதி சண்முகம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் என்று கூறி அறிக்கையை தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முறையாக தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது. உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று உத்தரவில் கூறியுள்ளார். உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

Tags : Pachaiyappan College ,Chennai High Court , Dismissal of 254 Assistant Professors of Pachaiyappan College in case of appointment malpractice: Chennai High Court Order
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...