×

குறைவான விற்பனை செய்த ஒன்றியங்களில் பால் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் சா.மு.நாசர் அறிவுறுத்தல்

சென்னை: பால், பால் உபபொருட்களின் கடந்த மூன்று மாத விற்பனையை ஒப்பிட்டு, குறைவாக விற்பனை செய்த ஒன்றியங்கள் விற்பனையை அதிகரிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமைச்சர் சா.மு.நாசர் அறிவுறுத்தினார். பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க, ஆவின் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மாவட்ட துணைப்பதிவாளர்கள், அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு, மாவட்ட வாரியாக பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் நிலுவையில் உள்ள தணிக்கை அறிக்கை மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

பால், பால் உபபொருட்களின் கடந்த மூன்று மாத விற்பனை விவரத்தை ஒப்பிட்டு குறைந்த விற்பனை மேற்கொண்ட ஒன்றியங்களுக்கு விற்பனையை அதிகரிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை தொடர்ந்து பால் கொள்முதல் அதிகரித்து வருவதையும், கொள்முதல் அளவை மேலும் உயர்த்த அனைத்து மாவட்ட துணை பதிவாளர்கள் மற்றும் ஒன்றிய பொது மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறை கொழுப்பு பால் விற்பனையை கூட்டும் விதமாக டீ கடை, ஓட்டல்கள், கேன்டீன்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களை பெற வேண்டும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வழங்கப்பட்ட ஆலோசனைகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் மழை பொழிவு நாட்களில் பால் மற்றும் பால் உபபொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க தமிழகம் முழுவதும், பால் பண்ணைகள் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.


Tags : Minister ,S.M. Nassar , Measures to increase milk sales in less selling unions: Minister S.M. Nassar instructs
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...