×

வெலிங்டனில் முதல் டி.20 போட்டியில் இந்தியா-நியூசிலாந்து நாளை மோதல்; வெற்றியுடன் தொடங்குமா ஹர்திக் பாண்டியா அன்கோ

வெலிங்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டி.20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் டி.20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணி களம் இறங்குகிறது. உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் படுதோல்வியை சந்தித்ததால் விமர்சனங்கள் எழுந்த நிலையில், நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் தேடவேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார்யாதவ், ரிஷப்பன்ட், சஞ்சு சாம்சன், சுப்மான் கில், தீபக்கூடா என அதிரடி வீரர்கள் உள்ளனர்.

பவுலிங்கில் புவனேஸ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், முகமதுசிராஜ், ஹர்சல்பட்டேல், உம்ரன் மாலிக் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களுடன் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடையே ஆடும் லெவனில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. மறுபுறம் கேன்வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் கான்வே, ஃபின் ஆலன், டேரி மிட்செல்,  பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம் என அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பவுலிங்கில் சவுத்தி, பெர்குசன், ஆடம் மில்னே ஆகியோர் மிரட்டலாம். சுழலில் மிட்செல் சான்ட்னர், இஷ்சோதி நெருக்கடி அளிப்பர். சொந்த மண்ணில் களம் இறங்குவது கூடுதல் பலமாகும்.

இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய உத்தேச அணி: இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன்,  ரிஷப் பன்ட்(வி.கீ.), ஹர்திக் பாண்டியா(கேப்டன்), வாஷிங்டன் சுந்தர்,  சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், உம்ரான் மாலிக். உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கும், இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கும் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் வெலிங்டனில் நாளை 85 சதவீதம் மழை வர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழையால் போட்டி பாதிக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளது. போட்டியை அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளன.

Tags : India ,New Zealand ,T20 ,Wellington ,Hardik Pandya Anko , India-New Zealand clash tomorrow in first T20 match in Wellington; Will Hardik Pandya start with a win?
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...