×

மார்த்தாண்டம்-வெட்டுவெந்நி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் இருந்து வெட்டுவெந்நி  செல்லும் ரோட்டில் பைக் மற்றும் கார்களில் அடிக்கடி பயணித்தால் கைகால் முடங்கும் நோய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளதாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார் மார்த்தாண்டத்தில் இருந்து வெட்டுவெந்நிக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக ரோடு உள்ளது. இந்த ரோடு வழியாக தேங்காப்பட்டணம், இனையம், பனச்சமூடு, கொல்லங்கோடு, நித்திரவிளை போன்ற சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் டவுன் பஸ்கள் தினசரி பலமுறை சென்று வருகிறது. அதேபோல் ஆயிரக்கணக்கான பைக், கார்களும் சென்று வருகிறது. இந்த ரோடு கடந்த ஒரு ஆண்டாக குண்டு குழியுமாகவே காணப்படுகிறது. ஆகவே பைக்கில் வருபவர்கள் விழுந்து எழுந்து செல்வது தொடர்கிறது. தற்போது ரோட்டில் தண்ணீர் தேங்கி குளம் போ‌ல் காட்சியளிக்கிறது.  சாலையின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் இல்லை.

ஆகவே சாலையை உடனே தார் போட்டு சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடைபயணம் மேற்கொண்டார் இந்த ரோடு வழியாக தான் நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து குழித்துறை நகர காங்கிரஸ் தலைவர்  கூறியதாவது: மார்த்தாண்டம்-வெட்டுவெந்நி சாலை ஒரு ஆண்டாகவே மோசமாகத்தான் உள்ளது. சாலை சுமார் 90 சதவீதம் பழுதுபட்டு காணப்படுகிறது. ஆகவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.
குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி கூறியதாவது: மார்த்தாண்டத்திற்கும்  வெட்டுவெந்நிக்கும்  உள்பட்ட மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதாகும். நகராட்சியில் நாங்கள் பொறுப்பு ஏற்பதற்கு முன்பே இந்த ரோட்டில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் பைப் பதிக்கப்பட்டது.

அதன் பிறகு நகராட்சி சார்பில் அப்போது சீரமைத்துள்ளனர். அதன் பிறகு ரோடு பழுதுபட்டுவிட்டது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோடை முழுமையாக தார்போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்துமுன்னாள் கவுன்சிலர் பொன் சகாதேவன் கூறியதாவது: இந்த சாலை பழுதால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரோட்டின் பரிதாப நிலைமையால் டவுன் பஸ்கள் உட்பட வாகனங்களும் பழுதுபடுகிறது. முழுமையாக தார் போட்டு சீரமைத்து அனைத்து பஸ்களையும் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக இயக்க வேண்டும் என்றார்.

Tags : Marthandam-Vettuvenni road , Public demand to repair Marthandam-Vettuvenni road
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...