×

ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை: முத்தரசன் பேட்டி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக கட்டுமான தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நிலம் இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் 10 ஆயிரம் வீடுகளும், நிலம் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நெல்லையில் மாநாடு நடைபெற உள்ளது.

இதில், தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மோடி அரசே வெளியேறு என்று முழக்கமிடப்படும். பாஜக கூறும்படி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். குறிப்பாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் செயல்படுகிறார். அவரை திரும்ப பெறக்கோரி டிசம்பர் மாதம் 29ம்தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் ராஜா தலைமையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : R.R. N.N. Mutharasan ,Mutharasan , Siege of Governor's House to get back RN Ravi: Mutharasan interview
× RELATED கச்சத்தீவு பற்றி 10 ஆண்டாக வாய்...