பயிற்சியாளர்களுக்கு அடிக்கடி ஓய்வு தேவைதானா: இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி

மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணி,  ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளிலும் ராகுல் டிராவிடுக்கு ஒய்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பயிற்சியாளர்கள் ஓய்வு குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்; ஓய்வு எடுத்துக்கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை, நான் அணியையும், வீரர்களையும் அறிந்துகொள்ள விரும்புவேன், அதன் மூலம் ஒரு கட்டுப்பாட்டை அணியில் கடைபிடிக்க முடியும். பயிற்சியாளர்களுக்கு ஏன் அடிக்கடி ஓய்வு அளிக்கப்படுகிறது, உண்மையில் அதற்கான தேவை என்ன என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: