பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக பாரதிதாசன் நியமனம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக பாரதிதாசனை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையில், உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதியரசர் எம். தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள், தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களது பதவி விலகலை ஏற்று, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் வீ.பாரதிதாசனையும் உறுப்பினர்களாக ச.கருத்தையாபாண்டியன், மு. ஜெயராமன், இரா. சுடலைக்கண்ணன், கே. மேக்ராஜ், மருத்துவர் முனைவர் பெரு. மதியழகன், முன்னாள் பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும்  முனைவர்எஸ்.பி. சரவணன், முதல்வர், கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி, முத்தூர், திருப்பூர் மாவட்டம் ஆகியோர்களை நியமனம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: