தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,469 கனஅடியாக அதிகரிப்பு

தேனி: ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் சின்னசுருளி அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தேனி மாவட்டம் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் சின்னசுருளி அருவி அமைந்துள்ளது.

இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை தொடர்வதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. இதனால் நாளுக்குநாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சின்னசுருளி அருவி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் கடமலைக்குண்டு ஊராட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பு ஆண்டில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் வைகை அணைக்கு நீர்வரத்து 1,469 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 1,269 கனஅடியாக இருந்த நிலையில் தற்பொழுது கூடுதலாக 200 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த 1,469 கனஅடி நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

Related Stories: