இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 271 பேருடன் சென்ற படகில் திடீர் தீ: பயணிகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பரபரப்பு

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவு அருகே 271 பேருடன் சென்ற படகில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லிம்பர் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரத்தை நோக்கி ஒரு படகு நேற்று சென்றது. இந்த படகில் 236 பயணிகளும், 35 பணியாளர்களும் இருந்தனர். காரங்ககேசம் கடற்கரையில் இருந்து சுமார் 1.5 கி.மீ. தூரத்தில் இந்தோனேசியாவின் பாலி நகரம் அருகே சென்றபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. படகில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி துடித்தனர்.

தகவலறிந்து 2 கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மேலும் மீட்பு படையினரும், மீனவர்களும் விரைந்தனர். படகில் தத்தளிக்கும் பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018ல் வடக்கு சுமத்திரா மாகாணத்தில் அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 167 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: