×

உங்களை சிறப்பாக செயல்பட செய்ய தூண்டும் நபர்களை உங்களை சுற்றி வைத்துக்கொள்ளுங்கள்: அஜித் அறிவுரை

சென்னை: உங்களை சிறப்பாக செயல்பட செய்ய தூண்டும் நபர்களை உங்களை சுற்றி உங்களை சுற்றி வைத்துக்கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித், நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் H.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு அவ்வப்போது சில அறிவுரைகளை வழங்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தன்னுடைய ரசிகர்களுக்கு காதுகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அஜித் அனுப்பிய குறுஞ்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உங்களை சிறப்பாக செயல்பட செய்ய தூண்டும் நபர்களை உங்களை சுற்றி உங்களை சுற்றி வைத்துக்கொள்ளுங்கள், நாடகமோ எதிர்மறையோ இல்லாமல், உயர்ந்த இலக்குகள் மற்றும் அதிக உந்தலுடன், நல்ல நேரம் மற்றும் நேர்மறை ஆற்றலுடன் பொறாமையோ, வெறுப்போ இல்லாமல் ஒருவருக்கொருவர் முழுமையான சிறந்ததை வெளியே கொண்டு வர வேண்டும் என, வாழு, வாழ விடு என அஜித் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவினை அஜித் ரசிகர்கள் உற்சாகமா பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். துணிவு படம் பொங்கலுக்கு வெளியாவதை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் அஜித்திற்கு சற்றும் சளைக்காத போட்டியாளரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் தூக்கமின்றி காத்திருக்கின்றனர்.

Tags : Ajith , Surround yourself with people who motivate you to perform better: Ajith advises
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!