×

பாரதியார் பல்கலைக் கழகம், சென்னை லயோலா ஆகிய கல்லூரிகளுடன் சமூக தணிக்கை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் மற்றும் லயோலா கல்லூரி, சென்னை ஆகிய கல்லூரிகளுடன் சமூக தணிக்கை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட  மேம்பாட்டு வாரியம் தலைமை அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட  மேம்பாட்டு வாரியத்துடன் பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் (BHARATIYAR  UNIVERSITY, Coimbatore ) மற்றும் லயோலா கல்லூரி, சென்னை (Loyola college,Chennai ) ஆகிய கல்லூரிகளுடன் சமூக தணிக்கை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் கையெழுத்தானது.
                    
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற வேண்டும். திட்டம் குறித்த செயல்பாடுகளை பயனாளிகளிடம் எடுத்துரைக்க வேண்டும். பயனாளிகளின் பங்கினை உணர்த்த வேண்டும். வெளிபட தன்மை மற்றும் தரக் கண்காணிப்பு, திட்டத்தை பற்றிய அனைத்து தகவல்களை பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டுமான பணிகளை பயனாளிகள் பார்வையிட செய்ய வேண்டும். இது போன்ற இதர அம்சங்கள் குறித்த சமூக தணிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற சமூக தணிக்கை செய்வதன் மூலம் திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை களையவும், உரிய நேரத்தில் திட்டத்தினை முடிக்க உதவியாக இருக்கும்.   இதுவரை  21 திட்டப்பணிகளில் சமூக தணிக்கை செய்ய  9 கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
             
இந்நிகழ்ச்சியில்  வாரிய நிர்வாகப் பொறியாளர் வி.பாண்டியன், வாரிய தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் ஜே.ஏ.நிர்மல்ராஜ், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் டாக்டர் முருகவேல், துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் லவ்லினா லிட்டில் பிளவர் துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் முனைவர் வாசுகி, லயோலா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜான்பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MoUs ,Bharatiyar University ,Chennai Loyola , MoUs were signed with Bharatiyar University and Chennai Loyola for social audit
× RELATED ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள்...