×

விதைச்சான்று, அங்ககச்சான்று அலுவலர்களின் திட்டப்பணியை ஆய்வு செய்தார் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

சென்னை: விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று அலுவலர்களின் திட்டப்பணியை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

1. தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றபின் வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சரால் 2021-2022-ம் நிதி ஆண்டிற்கு வேளாண்மைத் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கோயம்புத்தூரில் இயங்கி வந்த விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் அலுவலகம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சரால் 08.11.2022 அன்று கிண்டியில் திறந்து வைக்கப்பட்டது.

2. அங்கக விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி, அங்ககச்சான்று பெறுவதற்கு தனியாரிடம் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பங்கீட்டு உத்தரவாத திட்டத்தினை (Participatory Guarantee System) (PGS) விவசாயிகளுக்கு அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் அங்கக விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல்  இலவசமாக தங்களின் அங்ககப் பண்ணைகளுக்கு அங்ககச்சான்று பெற்று கொள்ளலாம்.    

3. 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் நஞ்சில்லா உணவுப்பொருட்களை விளைவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு, அவர்களது விளைப்பொருட்களிலுள்ள நச்சு பொருட்களின் தன்மையை அறிந்து அதன் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை முழு மானியத்தில் வழங்கும் பொருட்டு, ரூபாய் பன்னிரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பினை பின்பற்றி, பகுப்பாய்வு மாதிரி ஒன்றிற்கு ஆகும் கட்டணத் தொகை ரூ.4,720 முழு மானியமாக அங்கக விவசாயிகளுக்கு அரசால் இவ்வாண்டு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற அங்ககப் பண்ணை விவசாயிகளுக்கு வேளாண் - உழவர் நலத்துறை அமைச்சரால் வாய்ப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

4. இதனை தொடர்ந்து வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் விவசாயிகள், விவசாயக் குழுக்கள் மற்றும் விதைச்சான்று (ம) அங்ககச் சான்றுத் துறை மூலமாக அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டபின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று அலுவலர்களின் திட்டப்பணியை ஆய்வு செய்தார்.

5. இந்த ஆய்வில் சி. சமயமூர்த்தி, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், முனைவர். ச. நடராஜன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் மற்றும் கோ. வளர்மதி., விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Minister ,M. ,R. K. Paneer Selvam , Minister M. inspected the project work of seed certificate and membership certificate officers. R. K. Paneer Selvam
× RELATED முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்...