×

தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்; விருதுநகர் அம்மாச்சிபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்க கூடாது எனவே தற்போது வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றில் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

பின்பு அரசின் அனுமதி பெற்ற பின்பு அனுமதி பெற்ற பின்பு இந்த சிலையை வைக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாலசுப்பிரமணியன்  மேல்முறையீடு செய்திருந்தார். அதில்; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து முறையான அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த சிலை என்பது பட்டா இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும் முறையான அரசு அனுமதி பெறவில்லை. குறிப்பிட்ட பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளது.

எனவே அனுமதிக்க கூடாது என வாதிட்டனர். இதனை தொடர்ந்து நீதிபதிகள்; தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது என உத்தரவிட்டனர். முறையான அனுமதி பெறும் வரை சிலைகளை திறப்பதோ, மரியாதை செலுத்துவதோ கூடாது என்றும் முன்னாள் முதலமைச்சரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் நேரடி அனுமதி தரவில்லை என்றும், அலுவலர்களிடம் அனுமதி பெறவே அறிவுறுத்தியது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Court , No statue should be placed in Tamil Nadu without government permission: High Court Madurai Branch action order
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...