சிவகாசி ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்: ரயில் பயணிகள் கோரிக்கை

சிவகாசி: சிவகாசி ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். சிவகாசி ரயில் நிலையம் வழியாக செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், கொல்லம்-தாம்பரம், செங்கோட்டை-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், மயிலாடுதுறை-கொல்லம் ரயில் இயக்க பட்டு வருகிறது. கொரனா பரவலுக்கு முன்பு சிறப்பு ரயில்களும் இயக்க பட்டு வந்தது. சிவகாசி ரயில் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து ெசல்கின்றனர். ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கி செல்ல ஓய்வு அறை, குளியல் அறை, ஆண்கள், பெண்களுக்கு தனி தனி கழிப்பறை வசதி உள்ளது.

ஆனால் இதனை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வில்லை. சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை பயன்பாடின்றி உள்ளது. கழிப்பறையை சுற்றிலும் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் ரயில்வே நிலையம் வரும் பயணிகள் அவசர தேவைக்கு கழிப்பறை இல்லாமல் அவதிப்படுகின்றனர். சிலர் ரயில்வே வாளககத்தில் உள்ள திறந்த வெளியில் கழிப்பிடம் செல்கின்றனர். இதனால் ரயில்வே நிலைய வளாகம் சுகாதாரமின்றி உள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன காப்பகம் சேதமடைந்து கிடக்கிறது. இங்கு வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் வாகனங்கள் மழை, வெயிலால் சேதமடைகிறது.

ரயில் நிலையத்தில் சுகாதார பணியாளர்கள் பணியில் இல்லாததால் ரயில்வே நிலையம் சுகாதார மின்ற காணப்படுகிறது. விரைவு ரயில்கள் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் போது பயணிகள் கழிப்பிடம் சென்றால் அகற்ற சுகாதார பணியாளர்கள் இல்லை. ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் சுகாதார கேட்டால் அவதிப்படுகின்றனர். ரயில்வே டி எனவே சிவகாசி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் சென்னை-கொல்லம் ரயிலில் சிவகாசி வரும் பயணிகள் விருதுநகர் ரயில் நிலையம் இறங்கி ெசல்ல வேண்டியுள்ளதால் அவதிப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு போதிய பேருந்து வசதி இல்லை. சென்னை-கொல்லம் ரயிலில் வந்து விருதுநகர் இறங்கி சிவகாசி செல்ல மணிகணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. விருதுநர் எம்பி மாணிக்கம் தாகூர் தலைமையில் கொல்லம்-சென்னை ரயில் சிவகாசியில் நின்று செல்ல வலியுறுத்தி கடந்த செப்.24 ம் தேதி மறியல் போராட்டம் நடத்தினர். இதில் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதன் பின்னரும் சென்னை-கொல்லம் ரயில் சிவகாசியில் நிற்கவில்லை.

இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு ெசல்ல பட்டது. ஆனால் இது வரை கொல்லம்-சென்னை ரயில் சிவகாசியில் நின்று செல்லவில்லை. போதிய வருவாய் இல்லாததால் ரயில் நிற்கவில்லை என ரயில்வே துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகளும் சரிவர செய்து தரப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Related Stories: