×

சென்னை ராயப்பேட்டை இரத்தின விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டை அருள்மிகு இரத்தின விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி, சென்னை இராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோடு, அருள்மிகு இரத்தின விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 4455 சதுரடி கட்டிடம், திரு.வி.க. சாலையில்  உள்ளது. இந்த கட்டிடத்தை துரைசாமி நாயுடு மற்றும் திருமதி எல்லம்மாள் ஆகியோருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இவர்கள் நீண்ட நாட்களாக  வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கு விட்டிருந்ததாலும் சென்னை-2  மண்டல இணை ஆணையர் அவர்களின் சட்டபிரிவு -  78 ன் உத்தரவின்படி வருவாய் மற்றும் காவல் துறையினர் உதவியோடு இன்று திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை  மதிப்பு  ரூ.5 கோடி ஆகும்.

Tags : Ratinna Vinayagar Temple ,Rayapet, Chennai , Recovery of properties worth Rs.5 crores belonging to Ratna Vinayagar Temple in Rayapetta, Chennai
× RELATED சென்னை ராயப்பேட்டையில் பெண்ணுக்கு...