×

சபரி மலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என கேரளா தேவசம் போர்டு அமைச்சர் விளக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக நடை திறந்த நிலையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களை எந்தெந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அனுமதிக்கப்படலாம் என்பது குறித்து புத்தகம் வழங்கப்பட்டிருந்தது. இதில் 2018ம் ஆண்டு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கலாம் என்ற வார்த்தையை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தால், இந்த கருத்து பலரினிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கேரளா தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் இந்த வார்த்தைகள் தவறாக அச்சிடப்பட்டதாகவும் வழிகாட்டு நெறிமுறை புத்தகங்கள் அனைத்தையும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனால் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 10 வயதிற்க்கு கீழ் உள்ள குழந்தைளுக்கும், 50 வயதிற்க்கு மேல் உள்ள பெண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Tags : Kerala Devasam Board ,Minister ,Sabari Hill , Kerala Devasam Board Minister explained that the existing procedure will continue at Sabari Hill
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...