அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது: டிடிவி தினகரன் விமர்சனம்..!

சென்னை: அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது என்று டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை. அதிமுக தலையில்லாத முண்டம் போல உள்ளது. அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது. பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அதிமுக செயல்படாத நிலையில் உள்ளதால்தான் மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள். நாளையே தேர்தல் வந்தாலும் வேட்பாளர்களுக்கு படிவங்கள் கூட வழங்க முடியாத நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் சேர்த்து செயல்பட அரைக்கால் சதவீதம் கூட வாய்ப்பில்லை.

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கூட அவர்களால் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. அதிமுக தலைமையே யார் என்பதே முடிவாகாத நிலையில் எடப்பாடி தனது தலைமையில் கூட்டணி என்று கூறி வருகிறார். பதவி வெறி, பண பலம் இருப்பதன் காரணமாக சிலர் ஆவணமாக பேசுவது சரியா? வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்-ஐ சந்திக்க தயாராக உள்ளேன். கூட்டணிக்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 வாய்ப்பு தான் உள்ளது. அதில் ஒன்றோடு தான் கூட்டணி வைக்க வேண்டும்; அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் தனித்து நிற்கவும் தயார் என்றும் கூறினார்.

Related Stories: