சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் ஒரே பயணசீட்டில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் பயணிக்கும் வசதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.   

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பல்வேறு வகையான போக்குவரத்தை ஒருங்கிணைத்து செயல்படும் வகையிலான ஒரே பயண சீட்டு முறை அமல்படுத்துவது குறித்தான ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரே பயணசீட்டின் மூலம் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிகள் பயணிக்க இந்தமுறை ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும், கண்காணிக்கும் வகையிலும், ஒருங்கிணைக்கும் வகையிலும் போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது. அதில் 4 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சென்னை மாநகரத்தின் ஒருங்கிணைந்த போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலான அனைத்து போக்குவரத்து வசதிகளையும் இணைக்கும் குறித்தான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: