மழை காலங்களில் மின்கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல்

மதுரை: மழை காலங்களில் மின்கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. மதுரையில் மின்சாரம் தாக்கி கணவர் இறந்த நிலையில் மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இறந்த சதுரகிரியின் மனைவிக்கு ரூ.10.85 லட்சத்தை 6 சதவீதம் வட்டியுடன் கணக்கிட்டு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மின்கம்பியில் தென்னை ஓலை விழுந்து சதுரகிரி இறந்ததால் இயற்கையை குற்றம் கூறி தப்பிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.

Related Stories: