கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். புதிய அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, குத்து விளக்கு ஏற்றி வைத்தார். விழாவில் மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் ,ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் ,துணை சேர்மன் விமலா முருகன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: