பாரிவாக்கம் ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணி தீவிரம்

சென்னை: பூவிருந்தவல்லியை அடுத்த பாரிவாக்கம் ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கனமழை காரணாமாக திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில் பூவிருந்தவல்லியை அடுத்த பாரிவாக்கம் ஏரியும் தன முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் மாருதி நகர், ஜேஜேநகர், பஜனைகோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு வீடுகளுக்குள்ளும் வெள்ளம் தேங்கியதால் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. குடியிருப்புகளை சூழ்ந்த நீரை அகற்றும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது.

ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டு வெள்ள வீர் வெளியேற வழிவகை செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த 30க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: