தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர், திருப்பூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட மாவட்ட நிர்வாகங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: