கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு 6 வாரங்களில் விரிவான அறிக்கை: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை:  கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார், உஷாராணி தம்பதியின் 17 வயது மகள் பிரியா. கால் பந்தாட்ட வீராங்கனையான இவர், ராணி மேரி கல்லூரியில் படித்து வந்தார். மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த இருவருக்கு கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது காலில் அறுவை  சிகிச்சை செய்யப்பட்டது.

அதைதொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடையவே ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 16ம் தேதி காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு மருத்வர்கள் 2 பேர் பயிணிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.  

இதுதொடர்பாக  கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழுவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: