போலீசார் தகவல் மருத்துவக்குழு அறிக்கையின்படி நடவடிக்கை

சென்னை: சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம்  எம்.எம். கார்டன் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி மற்றும் உஷா தம்பதியரின் மகள் பிரியா (17). ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்ைச பலனளிக்காமல், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். இந்நிலையில், காவல்துறை சார்பில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் பெரவள்ளூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பணியிடை நீக்கம் தொடர்பான நகல் வழங்க மருத்துவர்களை அணுகியபோது அவர்கள் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மருத்துவ குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே அந்த 2 மருத்துவர்கள் மீது காவல்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, அதுவரை காவல் துறையினர் காத்திருப்பதாகவும் காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories: