×

மாணவி பிரியா உயிரிழப்பு விவகாரம் மருத்துவக்குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மாணவி பிரியா உயிர் இழப்பு விவகாரத்தில், மருத்துவ குழுவின் முழு அறிக்கை ஓரிரு நாளில் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நீர் வழிதடங்கல் உள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு கொசு வலைகளை வழங்கினார்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வடகிழக்கு பருவமழை ஒட்டி சென்னையில் நீர் வழி தடங்கல் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கொசுவலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. மாணவி பிரியா உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட பிறகே உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கையை வைத்து தான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்தும் சட்ட ரீதியாகவும் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கை ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு தெரிவித்தார். மாணவி குடும்பத்துடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு: இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பணி சம்பந்தமாக வெளியூரில் இருந்த காரணத்தினால், நேற்று முன்தினம் இரவு கன்னிகாபுரம் பகுதியில் உள்ள பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த பிரியாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரியாவின் தந்தை ரவி, தாயார் உஷாராணி சகோதரர்கள் லாரன்ஸ், வசந்த், விஜயன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.


Tags : Priya ,Minister ,M. Subramanian , Student Priya, death, issue, medical committee, report, Minister M. Subramanian, interview
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...