தெருவிளக்கு, குடிநீர் விநியோக பணிகளுக்கு தனியார் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் தெரு விளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்கு தனியார்களை நியமிப்பது தொடர்பான அரசாணையை  தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தெருவிளக்கு பராமரிப்பு, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தவும், பராமரிக்கவும் தனியார் ஒப்பந்ததாரர் அல்லது ஏஜென்சியை ஈடுபடுத்த பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க பேரூராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.  

மூன்று ஆண்டுகள் வரை டெண்டர் விட அனுமதிக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை அல்லது தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அல்லது மாவட்ட ஆட்சியர் மதிப்பீடு தயாரித்து, தனியார் சேவை ஒப்பந்ததாரர் அல்லது ஏஜென்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் தெருவிளக்கு அமைப்பு, நீர் வழங்கல் அமைப்பு ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான செலவைக் கண்டறிய வேண்டும். வெளிப்படையான ஒப்பந்தம் மூலம் குறைந்த விலையில் பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Related Stories: